சபரிமலை யாத்ரீகர்களை பீதியடையச் செய்யாதீர்கள் - கேரள முதல்வர் வேண்டுகோள்!


சபரிமலை யாத்ரீகர்களை பீதியடையச் செய்ய வேண்டாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும், போலீசுக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாதது தான் இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது

கடந்த வருடம் இதே எண்ணிக்கையில் பக்தர்கள் வந்த போதிலும் அதிகபட்சமாக 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நிற்கவில்லை என்றும், இந்த வருடம் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது என்றும் பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் பேசிய முதல்வர் பினராயி விஜயன்; சபரிமலை கோயிலில் வழக்கத்திற்கு மாறாக எதுவும் நடக்கவில்லை; கூட்ட நெரிசல் ஏற்படுவது சகஜம்; அதற்கான கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேவையான முன்னேற்பாடுகள் நடைபெறவில்லை, இதில் மாநில அரசு தவறு செய்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தேசிய யாத்ரீகர்களை பீதி அடைய வைக்கும் முயற்சி நடக்கிறது என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... காதல் தோல்வியால் தீக்குளித்த கல்லூரி மாணவி!

x