அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கனவு நனவாகியுள்ளதாக தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகளும், பிஆர்எஸ் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அயோத்தியில் ஸ்ரீ சீதாராம சந்திர சுவாமியின் சிலை நிறுவப்பட உள்ளது. கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது. தெலங்கானாவுடன் நாட்டு மக்கள் இணைந்து இதனை வரவேற்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராமர் கோயில் கட்டுமான பணி குறித்த வீடியோவையும் இந்த பதிவுடன் கவிதா இணைத்துள்ளார்.
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர், வரும் ஜனவரி 22ம் தேதி மதியம் 12.45 மணியளவில் ராம் லல்லா சிலையை, அயோத்தி ராமர் கோயில் கருவறையில் நிறுவ முடிவு செய்துள்ளனர். அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பிரிவுகளிலிருந்தும் 4 ஆயிரம் துறவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ரூ.7,00,000 கோடி முதலீடு... மோடி ஆசியில் அதானியின் அடுத்த அதிரடி ஆரம்பம்!