பழநி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் 


பழநி மலைக்கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிதரிசனம் செய்த காத்திருந்த பக்தர்கள்.

பழநி: பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு, இன்று கிருத்திகை மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய வருகை தந்தனர். இவர்கள், நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முருகப்பெருமானின் மூன்றாம்படைவீடான பழநி நாள்தோறும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும். இன்று கிருத்திகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய மலைக்கோயிலில் குவிந்தனர்.

இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தபோதும், பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். நான்கு மணிநேரம் காத்திருப்புக்கு பின்னரே பக்தர்களால் சுவாமிதரிசனம் செய்ய முடிந்தது. முன்னதாக நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னரே மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் வழியாக பக்தர்கள் மலைக்கோயில் சென்றடைந்தனர்.

x