சிதம்பரத்தில் திருமுறை கண்டெடுத்த விழா!


கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிவனடியார்கள் கூட்டம் சார்பில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

திருமுறை கண்டெடுத்த விழாவை முன்னிட்டு நேற்று(செப்.21) திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கிழக்கு கோபுரத்தில் இருந்து தேரோடும் நான்கு வீதிகளில் ராஜராஜசோழன் உற்சவர் திருமேனியிடும் அடியார்கள் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் அன்று மாலை திருக்கடையூரில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (செப்.22) காலை சிதம்பரம் வாண்டையார் மண்டபத்தில், ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் ராஜராஜசோழன், நம்பியாண்டார்நம்பி திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை ஓதுதல் நிகழ்ச்சியும், காவடியாட்டம் மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஆசியுரையும், குளித்தலை சு.ராமலிங்க சுவாமிகள் வாழ்த்துரையும், வேப்பூர் திருநாவுக்கரசர் மடம் தங்கதுரை சுவாமிகள் எழுச்சியுரையும், சென்னை சிவலோக திருமசம் வாதவூரடிகள் சிறப்புரையும் நடைபெற்றது.

இன்று மாலை (செப்.22) மாலை 5 மணியளவில் திருமுறைகள் நடராஜர் சந்நிதியில் வைத்து படைக்கப்பட்டு கிழக்கு கோபுர வாயிலிருந்து திருமுறை திருவீதி உலா புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக செல்கிறது. விழா நடைபெறும் மண்டபத்தில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை உலக சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்பு பீடாதிபதி அனுகூலநாத ராஜசேகர் அடிகளார் எஸ்.யு.ஐயப்பன் தீட்சிதர், சிவனடியார்கள் திருவாருர் கார்த்தி, சென்னை ஜெகன், ஈரோடு வெங்கடேசன், திருவாரூர் மாரிமுத்து, திருவாரூர் ஜெயராம் ஆகியோர் செய்திருந்தனர்.

x