மதுரை மீனாட்சி அம்மன் கோயில்; லட்டு தயாரிக்கும் இடத்தை மாற்ற நீதிமன்றம் உத்தரவு!


மதுரை மீனாட்சிஅம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்கும் இடத்தினை வேறு இடத்திற்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

லட்டு தயாரிக்கும் பணி

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோயில் சார்பில் இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான லட்டு தயாரிக்கும் பணிகள் கோயிலின் திருஞானசம்பந்தர் மண்டபத்தில் நடந்து வருகின்றன.

இதனை மாற்றக் கோரி மதுரை ஆதினத்தின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கான இலவச லட்டு தயாரிக்கும் இடத்தினை திருஞானசம்பந்தர் மண்டபத்தில் இருந்து மாற்ற வேண்டும்.

4 மாதங்களுக்குள் இந்த மாற்றத்தை மேற்கொள்வதுடன், தற்போது லட்டு தயாரிக்கும் இடமாக இருந்து வரும் திருஞானசம்பந்தர் மண்டபத்தில் தேவாரம், திருவாசகம் குறித்த பாடசாலை நடத்த அனுமதிக்கும் படியும் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

x