நாகை : செப்டம்பர் 8ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!


வேளாங்கண்ணி கோயில்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி செப்டம்பர் 7ம் தேதி இரவு தேர்பவனி, 8ம் தேதி மாதா பிறந்தநாள் விழா நடைபெறுவதால் செப்.8 ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக வழிபாட்டுத் தலமாக விளங்குவது தனி சிறப்பாகும்.

இக்கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த திருவிழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கிறார்கள். அதன்படி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வருகிற 7்ம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனையடுத்து 8ம் தேதி அன்னையின் பிறந்த நாள் விழா நடக்கவுள்ளது. இதனையொட்டி செப்.8 ம் தேதி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

x