மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா; பெண்கள் ஆயிரக்கணக்கில் பொங்கலிட்டு வழிபாடு!


மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்களும் இருமுடி கட்டி வந்து அம்மனை தரிசித்து செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது

இந்த கோயிலில் வருடா வருடம் 10-நாள் மாசி கொடை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு பின் ஆவணி மாதம் அஸ்வதி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட அஸ்வதி பொங்கல் விழா இன்று நடைபெற்ற நிலையில், கோயில் முன் வைக்கப்பட்ட பெரிய பொங்கலை கோயில் தந்திரிகள் ஆன்மிக பெரியோர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா

தொடர்ந்து தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கோயில் முன் திரண்டு நீண்ட வரிசையில் அமர்ந்து 7001-பானைகளில் பொங்கலிட்டனர். அப்போது, கோயில் தந்திரிகள் பொங்கலுக்கு புனித நீர் தெளித்து வழிபாடு நடத்தினார். இதனையடுத்து மண்டைக்காடு பகவதியம்மனுக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.

x