திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே மாதத்தில் ரூ.108 கோடி காணிக்கை; தேவஸ்தான அதிகாரிகள் தகவல்


திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ரூ108 கோடியே 46 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதையொட்டி, தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி, உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். பக்தர்கள் தங்களின் தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

உண்டியல் காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 7 அடி உயரத்தில் துணியால் ஆன பிரமாண்டமான உண்டியல் உள்ளது. இந்த பிரமாண்ட உண்டியல்கள் நிரம்பியதும், திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், உடனடியாக அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 108 கோடியே 46 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக கோயில் தேவஸ்தானம் கூறியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 19 இலட்சத்து 73 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், நவம்பர் மாதம் பக்தர்கள் வாங்கிச் சென்ற லட்டுக்களின் எண்ணிக்கை 97 இலட்சத்து 47 ஆயிரம் ஆகும். மேலும், 7 இலட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மக்களே உஷார்.. சென்னையை நெருங்குகிறது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

x