மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள ஏரிகாத்த ராமர் கோயில் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதத்தின் முதல்நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரின் மையப்பகுதியில் பிரசித்திப் பெற்ற ஏரிகாத்த கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் முதல்நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், பொன்விளைந்த களத்தூர் நரசிம்ம பெருமாள் கோயில்களிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.