திருநறையூர் மங்கள சனீஸ்வரன் கோயிலில் ஜப்பான் நாட்டின் நன்மைக்காக யாகம்


கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், திருநாரையூர் உள்ள மங்கள சனீஸ்வரர் கோயில் எனும் பர்வதவர்த்தினி உடனாய ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் நாட்டின் நன்மைக்காக, அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறப்பு யாகத்தை மேற்கொண்டனர்.

திருநறையூரில் சனீஸ்வர பகவான் தனது குடும்பத்துடன் மங்கள சனீஸ்வரனாக அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹருவோ சேத்தோ தலைமையில் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறப்பு யாகம் மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி,அவரது தலைமையில் வந்த 5 பேர் ஜப்பான் நாட்டில் ஏற்படும் நிலநடுக்கம், பூமி அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், ஜப்பான் நாட்டின் நன்மைக்காக சிறப்பு யாகத்தை மேற்கொண்டனர்.

முன்னதாக, மங்கள சனீஸ்வரனுக்கு 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் தெரிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வரும் நவ.27-ம் தேதி மீண்டும் அந்தக் கோயிலில் சிறப்பு யாகம் நடத்த உள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

x