தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகளை விதித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோழ மன்னர் ராஜராஜசோழன் காலகட்டத்தில் தஞ்சாவூரில் பெரியநாயகி உடனமர் பெருவுடையார் திருக்கோயில் காவிரிக்கரையில் கட்டப்பட்டது. பிரகதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதிலிமிருந்து பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். தற்போது இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களில் சிலர் ஆடை கட்டுப்பாடின்றி வருவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, பெரியகோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ” டிரஸ்கோடு” என்ற ஆடை கட்டுப்பாடு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில், ”ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும்” என்றும் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களிலும் இத்தகைய ஆடைக்கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில், புதிதாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனர், பக்தர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கெனவே கோயில்களுக்கு வரும் பக்தர்கள் லுங்கி, ஷார்ட்ஸ் ஆகியவை அணிந்து வரக்கூடாது என கட்டுப்பாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை... சீனாவில் வேகமெடுக்கும் புதிய வகை நோய்!