ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு, நாளை ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரியில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில், ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலைப் பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.