தென்காசியில் உள்ள பள்ளிவாசலில் 22 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த யானையை முறையான ஆவணங்கள் இல்லாததால் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த போது அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு கதறியழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. எந்த பள்ளி வாசலுக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த பள்ளிவாசலுக்கு உண்டு. ஏனெனில் இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமாக யானையும் உண்டு. இந்த பள்ளிவாசல் அருகில் யா முஹம்மத் சமாதியும் வைக்கப்பட்டிருப்பதால் இங்கு வந்து அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்வது வழக்கமான ஒன்று.
இந்த பள்ளிவாசலில் கடந்த 22 ஆண்டுகளாக ’ஜெய்னி’ என்ற 58 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு முறையான ஆவணங்களை காண்பிக்குமாறு வனத்துறையினர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிர்வாகத்திடம் கேட்டனர். அப்போது ஆவணங்களை நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் யானையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 22 ஆண்டுகளாக மக்களுடன் பழகி வந்த யானைக்கு கடையநல்லூர் மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர். பலரும் யானைத் தும்பிக்கையைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கதறியழுத காட்சி சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையும் வாசிக்கலாமே...