திருப்பதியில் கருட பஞ்சமி... கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!


கருட வாகன சேவை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட பஞ்சமியொட்டி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நான்கு மாட வீதியில் இருபுறமும் காத்திருந்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் கற்பூர ஆரத்தி எடுத்து மனமுருகி வேண்டிக் கொண்டனர். இதில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

x