நாளை திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 2700 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. அதே சமயம் கூடுதலாக இன்று முதல் நவம்பர் 27ம் தேதி வரை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 50 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெறும் மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்வார்கள். இந்த வருட திருவிழாவைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் குவியும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், மறு மார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் இன்று முதல் நவம்பர் 27ம் தேதி வரை மூன்று தினங்களிலும் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகைக்கு பாலியல் தொல்லை... சர்ச்சையில் இயக்குநர் சீனு ராமசாமி!
மிஸ் பண்ணாதீங்க... இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்!