மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம்தேதி மாலை திறக்கப்பட்டது. 17ம்தேதி காலை மண்டல பூஜை தொடங்கியது. இதனையடுத்து, பலர் கார்த்திகை 1ம் தேதி முதல் மாலை அணிந்து விரதத்துடன் தங்களது யாத்திரையை தொடங்கி வருகின்றனர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 8, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், டிசம்பர் 24, 31 தேதிகளில் மாலை 4.30 மணிக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், ஜனவரி 7ம் தேதி மாலை 4.50 மணிக்கும், ஜனவரி 10, 17ம் தேதிகளில் மாலை 4 மணிக்கும், ஜனவரி 14ம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல், கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு டிசம்பர் 9, ஜனவரி 13, ஜனவரி 20 தேதிகளில் இரவு 11 மணிக்கும், டிசம்பர் 26, ஜனவரி 2, 9, 12, 19, 16 தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோட்டயத்துக்கு டிசம்பர் 1, 8, 29, ஜனவரி 12, 19 தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், டிசம்பர் 15, 22, ஜனவரி 5 தேதிகளில் மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவுக்கு டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 14, 21 தேதிகளில் நள்ளிரவு 1 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், ஆந்திர மாநிலம் நா்சாபூரில் இருந்து கோட்டயத்துக்கு டிசம்பர் 10, 17, 24, 31 ஜனவரி 7, 14 தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிசம்பர் 11, 18, 25, ஜனவரி 8, 15 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோவை, திருச்சூா் வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டுகளை இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று BLACK FRIDAY... களை கட்டும் ஆன்லைன் விற்பனை... கம்மி விலையில் கைநிறைய அள்ளலாம்!
சென்னையில் பரபரப்பு... 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று!