மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமிக்கு இன்று சென்றதன் மூலம் கிருஷ்ண ஜென்ம பூமிக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார் மோடி.
உத்தரப் பிரதேசத்தில் மதுரா நகரத்தில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி இந்து மக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மதுரா நகரம் முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
பிரசித்தி பெற்ற கிருஷ்ண ஜென்மபூமிக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். கிருஷ்ண ஜென்ம பூமிக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். மதுரா நகரில் 3 மணி நேரம் பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடியை நேரில் சென்று வரவேற்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அங்கு சென்றுள்ளார்.
அயோத்யா மற்றும் காசியைத் தொடர்ந்து மதுராவிற்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு மதுரா வந்த மோடி, 6.15 மணி வரை அங்கே இருந்தார். அதேபோல், பிரதமர் மோடி, சந்த் மிராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியிலும், அதைத் தொடர்ந்து பிரஜ் ராஜ் உத்சவ் ரயில் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
மீராபாயின் 525-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த 5 நிமிட ஆவணப்படத்தை பார்க்கும் மோடி, மீரா பாயின் நினைவாக நாணயத்தையும் வெளியிடுகிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் உத்தப் பிரதேச போலீஸார் சுமார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியின் மதுரா வருகையை ஒட்டி அந்த நகரில் பாஜகவினரும் திரண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
மர்ம காய்ச்சலால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... உலக சுகாதார அமைப்பு அலர்ட்!