மதுரை அழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்: மலை அதிர கோவிந்தா முழக்கம்! - போட்டோ ஆல்பம்


மதுரை அழகர் கோயில் மக்கள் கூட்டம்

மதுரை அழகர் கோயில் ராஜகோபுரத்திற்கு இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

குடமுழுக்கு வைபவம்

மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழகர்கோயில். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. அழகர் கோயிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.

கடம்

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கள்ளழகர் கோயிலில் கடந்த 2011 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று நடத்தப்பட்டது. இதற்காக ராஜகோபுரம் 2 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்தது.

மக்கள் கூட்டம்

மதுரையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் திருவிழாக்கள் முக்கியமானவை. அதிலும் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் உலகப்புகழ் பெற்றது. அழகர் ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் அழகர் கோயிலில் இருந்து தான் புறப்படுவார். தற்போது அந்தக் கோயிலின் ராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது.

இதற்காக கடந்த 3-ம் தேதி அன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு வேத மந்திரங்கள் இரண்டு நாட்களாக முழங்கப்பட்டன.

மேலும் 7 நிலைகளை கொண்ட இந்த ராஜகோபுரம் புது வர்ணத்தால் ஜொலித்தது. ஆறரை அடி உயரம் கொண்ட 7 கலசங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. அப்போது கோவிந்தா முழக்கம் மலை முழுவதும் எதிரொலித்தது.

ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரத்திற்கு மலர் தூவப்பட்டது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்ததால் அழகர் கோயில் பகுதி முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ப.கவிதாகுமார்

x