அதிர்ஷ்டம் தரும் ஆடி மாதம்... இந்த ஆலயங்களை மிஸ் பண்ணாதீங்க!


மதுரை மீனாட்சி

ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்பு வாய்ந்த மாதம். ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் தீமிதி, பால்குடம், கரகம், காவடி என்று உற்சவங்களுக்கும், பக்தர்களின் உற்சாகத்திற்கும் பஞ்சம் இருக்காது. சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதத்தில் இந்த முக்கியமான அம்மன் ஆலயங்களை மிஸ் பண்ணாதீங்க. கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் பலித்து வாழ்வில் மேன்மை அடையலாம்.

சமயபுரம் மாரியம்மன்

இந்தியாவின் மிக முக்கிய ஆலயங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சிவபெருமான் சுந்தரேஸ்வரராகவும், பார்வதி தேவி மீனாட்சியாகவும் காட்சி தருகின்றனர். மிகப்பெரிய சிவஸ்தலம் என்றாலும் இங்கு மீனாட்சியே ஆட்சி புரிகிறார். அதனால் அன்னை மீனாட்சியை வணங்கி நின்றால் வாழ்வில் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று பக்தர்கள் மனம் உருக வேண்டி நிற்கிறார்கள்.

திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக கருதப்படுகிறார். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் அல்லது திருமணம் நடைப்பெறுவதில் தடைகள் உள்ளவர்கள் சமயபுரம் மாரியம்மனின் வேண்டி நின்றால், அத்தனையும் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள். பக்தர்கள்
ஆடி மாதத்தில் இந்த அம்மனுக்கு சிறப்பு உற்சவம் நடக்கும் என்பதால் இங்கு சென்று மாரியம்மனை வழிபடுவது வாழ்வில் வளம் பெற உதவும்.

காஞ்சி காமாட்சி

51 சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சியம்மனின் ஆலயத்திற்கு சாதாரண நாட்களிலும் பக்தர்கள் குவிகின்றனர். ஆடி மாதம் முழுக்கவே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் ஆதி சங்கராச்சாரியார் ஸ்ரீசக்கரத்தை வடிவமைத்து பிரதிஷ்டை செய்தார்.

கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கையில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு அழகு கோலத்தில் காட்சி தருகிறாள். அம்மனை வழிபட்டால் அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

ஆனைமலை மாசாணி அம்மன்

பொள்ளாச்சி மாசாணி அம்மன் ஆலயம் தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும். நான்கு கைகளுடன் மண்டை ஓடு, பாம்பு, மேளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியவாறு 17 அடி உயரத்தில் படுத்த நிலையில் காட்சியளிக்கிறார் அம்மன். பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீர்த்து வைப்பவளாகவும், மக்களின் உடல் உபாதைகளைச் சரிசெய்பவளாகவும், துன்பங்களைத் தீர்த்து மக்களுக்கு இன்பங்களை வழங்குபவளாகவும் இந்த அம்மன் விளக்குகிறார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் சிறப்பு வாய்ந்தது. நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் யோக வடிவில், பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி எழுந்தருளி காத்து வருகிறாள் அங்காளம்மன். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியிலும், அமாவாசை தினங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். குறிப்பாக ஆடியில் அங்காள பரமேஸ்வரியை தரிசிப்பது ஆயிரம் கோடி நன்மைகளைத் தரும்.

மேல்மலையனூர் அங்காளி

குமரி அம்மன்

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள குமரி அம்மன் ஆலயம் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. குமரியாக வீற்றிருக்கும் அம்மன், தன்னை தரிசிப்பவர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்துகிற வல்லமை மிக்கவர். ஆலயத்தின் வளாகம் பார்ப்பதற்கு ஒரு அதிசயம் மட்டுமல்ல, நமது ஆன்மாவிற்கு புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

பெரியபாளையத்தம்மன்

சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் ஆலயத்தின் பிரதான தெய்வமான பவானி அம்மனை தரிசிக்க, வார இறுதி நாட்களிலும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருக்கும் இந்த ஆலயத்திற்குச் சென்று தீச்சட்டி எடுத்தும், வேப்பிலை ஆடை அணிந்தும் கோயிலை வலம் வந்தால் நினைத்தது கைகூடும், காரியங்கள் யாவும் வெற்றி அடையும்.

x