ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா... சரவண பொய்கையில் தெப்பம் அமைக்கும் பணி தீவிரம்!


திருத்தணி அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில்

முருகனின் அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அஸ்வினியுடன் தொடங்கி, 8 ஆம் தேதி பரணி, 9 ஆம் தேதி ஆடி கிருத்திகை திருவிழாவும், அன்று மாலை மலை அடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.

சரவண பொய்கை திருக்குளத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் தெப்ப திருவிழாவிற்காக தெப்பம் அமைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று நாட்களாக தெப்பம் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி முருகப்பெருமானை வழிபடுவார்கள்.

x