திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா: இன்று முதல் 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!


ரயில்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை•(நவ.18) நடைபெறவுள்ள சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சூரசம்ஹார நிகழ்வு

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா 19- ம் தேதி வரை நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை மறுநாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்குப் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தென்னக ரயில்வே செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை - திருநெல்வேலிக்கு இன்று (நவ.17) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நாளை நண்பகல் 12:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்; திருச்செந்தூர் முதல் தாம்பரம் வரையில் நாளை (நவ.18) இரவு 10.10 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு நவம்பர் 19 நண்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

x