சிதம்பரம் கோவிலில் தீ மிதி திருவிழா!


மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

சிதம்பரத்தில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21ந்தேதி கொடியேற்றப் பட்டு இன்று நான்காம் நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழத்தெருவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 21ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்று வருகிறது. இன்று நான்காம் நாள் திருவிழா வெகு வரிசையாக நடைபெற்றது.

25ம் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 30ம் தேதி தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா, 31ம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்குவார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி விடையாற்றி உற்சவமும், 2ம் தேதி மாலையில் மஞ்சள் நீர் விளையாட்டும் நடைபெறும். அன்று இரவு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

x