சதுரகிரி கோயிலுக்கு செல்லத் தடை… காத்திருந்து திரும்பிச் சென்ற பக்தர்கள்!


சதுரகிரி மலை

கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறை தடை விதித்த நிலையிலும் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து காத்திருந்து திரும்பி சென்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கே மாதம் தோறும் அமாவாசை, பெளர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சதுரகிரி மலை ஏறும் பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

சதுரகிரி மலை

ஆனாலும், இன்று அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த நிலையில் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஏமாற்றத்துடன் கேட்டின் முன்பு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

x