உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டிய நிலையில் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் மனிதர்கள் மீது மாடுகளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகை, வெவ்வெறு வகைகளில் கொண்டாடப்படுகிறது. 5 நாள் திருவிழாவாக வெவ்வேறு மத சடங்குகளுடன் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி மறுநாளான இன்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் மாடுகளை தங்கள் மீது ஓட வைத்து வித்தியாசமான முறையில் அப்பகுதி மக்கள் மத சடங்குகளை மேற்கொண்டனர்.
உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தெஹ்சில் பிடவாட் கிராமத்தில் இந்த திருவிழா நடைபெற்றது. அப்போது மாடுகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர், சில நபர்கள் அதன்முன் படுத்து விடுகின்றனர்.
அப்போது கீழே படுத்து இருந்த நபர்கள் மீது அந்த அலங்கரிக்கப்பட்ட மாடுகள், கன்றுக்குட்டிகள் ஓடின. மாடுகளை தங்கள் மீது மிதித்து ஓட விடுவதன் மூலம் தாங்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...