அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயிலைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு 'உலகமே ஒரே குடும்பம்' என்ற பொருள்படும் வகையிலான சம்ஸ்கிருத வார்த்தைகளை கல்வெட்டில் பொறித்தது உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இருநாடுகள் உறவு, வர்த்தகம் குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச்சு நடத்தினார். அதன்பிறகு அமீரகத்தில் வாழும் இந்தியர்களின் அஹ்லான் மோடி நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி அவர்கள் முன்பு தோன்றி பேசினார்.
இதையடுத்து நேற்று மாலையில் அபுதாபி அல் முரக்கா பகுதியில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில் இது என பெயர் பெற்றுள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய நிலையில் அவரே நேரிலும் அதைத் திறந்து வைத்தார்.
கோயிலைத் திறந்து வைத்தபிறகு பிரதமர் மோடி பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தார். அதன்பிறகு கோயிலைச் சுற்றிப்பார்த்த அவர் அங்குள்ள கல்லில் பொறித்த வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உளி, சுத்தியல் உதவியுடன் கோயில் கல்லில் வசுதைவ குடும்பகம் (Vasudhaiva kutumbakam) என்ற வார்த்தைகளை அவர் பொறித்தார்.
வசுதைவ குடும்பகம் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு 'உலகமே ஒரே குடும்பம்' என பொருள். உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் என்பதை பறைசாற்றும் வகையில் பிரதமர் மோடி இந்த வார்த்தையை எழுதியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த செயல் என்பது அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ தேர்வுகள்... 39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!
பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை...மதுரை சுங்கச்சாவடி அருகே பயங்கரம்!
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை... தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!
சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்... கைவிட்டு போனது ‘விவசாயி சின்னம்’!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை... விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!