ஆனித் திருவிழாவுக்கு தயாராகும் நெல்லை


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்

சிவபெருமான் திருநடனக் காட்சி தந்த பஞ்ச சபைகளில் இரண்டு சபைகளைக் கொண்டது திருநெல்வேலிச் சீமை. தாமிரசபையாகிய நெல்லையப்பர் கோயில் திருநெல்வேலியிலும், சித்திர சபையாகிய திருக்குற்றாலநாதர் கோயில் குற்றாலத்திலும் அமைந்துள்ளன.

மற்ற மூன்று சபைகளாகிய பொற்சபை சிதம்பரத்திலும், வெள்ளியம்பலம் மதுரையிலும், ரத்தின சபை திருவாலங்காட்டிலும் அமைந்துள்ளன.

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர்

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆண்டு முழுக்க பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும், ஆனி பெருந்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்திருவிழாவின் தொடக்கமாக இக்கோவிலைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கோவிலிலும் உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நெல்லையப்பர் கோவிலுக்கு வெளியே ஊர் எல்லை தெய்வமாக அமைந்துள்ள பிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் 10 நாள் உற்சவம் வைகாசியில் நடைபெறும்.

தொடர்ந்து கோயிலுக்குள் இருக்கும் விநாயகருக்குரிய 6 நாட்கள் நடைபெறும் உற்சவம் வைகாசியில் கொடியேற்றத்துடன் தொடங்கி வைகாசியிலேயே நிறைவு பெறும். இந்த திருவிழாவில் விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் உட்பிரகாரத்தில் திருஉலாவும் நடைபெறுகிறது.

தொடர்ந்து மூவர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து பவானி அம்பாள் உடனுறை சந்திரசேகரர் உற்சவமும் நடைபெறுவது வழக்கம். இத்தனை உற்சவங்கள் பூர்வாங்கமாக நடைபெற்ற பிறகே ஆனி மாதத்தில், நெல்லையப்பருக்கான ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் உற்சவர் உலா

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் உற்சவர் உலா

ஆனித் தேரோட்டத்தின் போது நெல்லையப்பருக்கான பெரிய தேர், அம்பாள் தேர், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கான சிறிய தேர்கள் என மொத்தம் ஐந்து தேர்கள் இழுக்கப்படும். விநாயகருக்கான உற்சவ கொடியேற்றம் நடைபெற்ற பிறகே, திருநெல்வேலி டவுன் கிழக்கு ரதவீதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தேர்களையும், சுவாமி அம்பாள் வீதியுலா வரும் வாகனங்களையும் தயார்படுத்தி, சுத்தப்படுத்தும் பணிகள் வரிசைக்கிரமமாகத் தொடங்குவது வழக்கம். ஆனித் திருவிழாவுக்கு திருநெல்வேலி தயாராகிறது.

2.7.2023 - நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்

திருக்குளம், காந்திமதி அம்மன் கோவில் கோபுரம்

x