நெகிழ்ச்சி சம்பவம்... கோட்டை மாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கிய இஸ்லாமியர்கள்!


மாரியம்மன் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு ஜாமியா மஸ்ஜித் சார்பில் இஸ்லாமியர்கள் இலவசமாக குடிநீர் பாட்டில்களை வழங்கி அவர்களின் தாகம் தீர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்திருந்தன.

சேலம் ஜாமியா மஸ்ஜித் சார்பில் குடிநீர் பாட்டில்கள் விநியோகம்

அப்போது கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ள சேலம் ஜாமியா மஸ்ஜித் சார்பில் மூத்தவல்லி அன்வர் தலைமையில், இஸ்லாமியர்கள் கோயில் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு 20,000 குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கி பக்தர்களின் தாகம் தீர்த்த சம்பவம் மதநல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

குடிநீர் பாட்டில்கள் வழங்கினர்

இதையும் வாசிக்கலாமே...


முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!

x