ஆவணி பவுர்ணமி: தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்


திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள்.

‘மலையே மகேசன்’ என போற்றப்படும் திருவண்ணா மலையில் உள்ள “திரு அண்ணாமலை”யை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று வழிபடுவது சிறப்பாகும். இதையொட்டி, ஆவணி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்களின் கிரிவலம் நேற்று அதிகாலை தொடங்கியது.

நண்பகல் மற்றும் பிற்பகலில் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில், மாலை 4 மணிக்கு பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது.

“நம சிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி, பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கிரிவலம் விடிய, விடிய தொடர்ந்தது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

x