நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வெள்ளி ரதம்


நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வெள்ளி ரதத்தில் பவனி வந்த அம்மன். (அடுத்தபடம்) சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வெள்ளிரத பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 14-ம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு அம்மன் சிம்ம, காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷப உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் தங்க ரதம் உலா நடைபெற்றது. நேற்று காலை காளியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார்.

இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இரவில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் திரு வீதி உலா நடைபெற்றது. இன்று காலை தேரோட்டமும், இரவு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறு கின்றன. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் செட்டியார் ஆகியோர் செய்தனர்.

x