ஆறாம் நாள் நவராத்திரி பிரம்மோற்சவம் - ஹனுமன் வாகனத்தில் அருள்பாலித்தார் மலையப்பர்!


திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கடந்த 15-ம் தேதி இரவு பெரிய சேஷ வாகன சேவையுடன் தொடங்கிய இவ்விழாவில் ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், கர்நாடகம் என பல்வேறு மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். தசரா விடுமுறை என்பதால் தினந்தோறும் பக்தர்களின் கூட்டம் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் அலைமோதுகிறது. தொடர்ந்து 6 நாட்களாக பக்தர்கள் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் பங்கேற்று சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. இதனை தொடர்ந்து மாலை 4 மணி முதல் 6 மணி வரை பூப்பல்லக்கு சேவை நடந்தது.

திருமலை திருப்பதி

இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து இரவு 7 மணிமுதல் 9 மணி வரை தங்க யானைவாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். 4 மாட வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

x