நெருங்கி வரும் ஆயுத பூஜை, விஜயதசமி... கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை!


ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது. வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். மேலும் கோயில்களில் தினந்தோறும் அம்மனுக்கு வெவ்வேறு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. இதற்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பூக்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பூக்கள் விலை உயர்ந்திருந்தாலும் பூஜைக்காக பொதுமக்கள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.

மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200-க்கும், மற்றொரு ரகம் ரூ.800-க்கும் விற்பனையானது. முதல் ரக மல்லிகைப்பூ மார்க்கெட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தது. முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.320-க்கும் விற்கப்பட்டது.

சம்பங்கி - ரூ.240, அரளி - ரூ.400, ஜாதி பூ- ரூ.800, ரோஜா - ரூ.300, கலர் செவ்வந்தி - ரூ.240, தாமரை 1 - ரூ.40, செண்டுமல்லி - ரூ.80, கோழிக்கொண்டை பூ - ரூ.120 விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை தொடர்ந்து விலை உயர்ந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!

x