மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் உள்ள வினைதீர்க்கும் விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள வினைதீர்க்கும் விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த சிலமாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள், தற்போது நிறைவு பெற்றதால் கிராம மக்கள், கோயில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கோயில் வளாகத்தில் யாக சாலை அமைத்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கோபுரக் கலசங்களின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், விநாயகர், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும்கிராம மக்கள் செய்திருந்தனர்