ஐயப்பன் கோயில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு


சபரிமலை ஐயப்பன் கோயில்

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை வரும் 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் கொடியேற்றம்

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை வரும் 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டுவார். ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு 18ம் தேதி அதிகாலை முதல் 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன் 22ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x