அடேயப்பா... 48 நாளில் ரூ.5.82 கோடி உண்டியல் காணிக்கை அள்ளிய திருச்செந்தூர் கோயில்!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட உழவாரப்பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 48 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.82 கோடி கிடைத்துள்ளது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமை வகித்தார். கோயில் இணை ஆணையர் ஞானசகேரன் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி உதவி ஆணையர் (பொ) செல்வி, அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் விளாத்திகுளம் முருகன், ஏரல் சிவலோகநாயகி ஆகியோர் மேற்பார்வையில் சிவகாசி பதிணெ்ன் சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக் குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

இதில் நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.5 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரத்து 174, கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 89, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 189, வைகாசி விசாச திருவிழா தற்காலிக உண்டியல் மூலம் ரூ.92 ஆயிரத்து 694 என மொத்தம் ரூ.5 கோடியே 82 லட்சத்து 68 ஆயிரத்து 146 கிடைத்துள்ளது.

மேலும், 3,787 கிராம் தங்கம், 49,288 கிராம் வெள்ளி பொருட்கள், 1,535 வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன. 48 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.82 கிடைத்துள்ளது.

x