ஸ்ரீ ராமானுஜரால் கட்டப்பட்ட திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில்!


திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் இராஜகோபுரம்

திருப்பதி நகரின் மையப்பகுதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 10-ம் நூற்றாண்டில் ஸ்ரீ ராமானுஜரால் கட்டப்பட்டது. ஸ்ரீ கோவிந்தராஜர் யோக நித்திரை நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சுவாமியின் காலடியில் ஸ்ரீதேவி, பூதேவியர் அமர்ந்துள்ளனர். மேலும், தாயார் புண்டரீகவல்லி, ஆண்டாள், பார்த்தசாரதி பெருமாள், ஆழ்வார்கள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் சன்னதிகளும் இடம்பெற்றுள்ளன.

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில்

திராவிட சிற்பக் கலையின் படி அமைந்துள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 50 மீட்டர் உயரமும், 7 நிலைகளையும் கொண்டது. சமீபத்தில் இக்கோயில் விமானத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடந்து முடிந்த நிலையில், கடந்த 26-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 30-ம் தேதி கருட வாகன வீதிஉலா, ஜூன் 2-ம் தேதி தேரோட்டம், 3-ம் தேதி சக்கர ஸ்நானம் ஆகியவை நடைபெறுகின்றன.

கருட வாகன வீதிஉலா

x