காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலும், இங்குள்ள சனி பகவான் சன்னதியும் மிகவும் பெயர்பெற்றவை.
தர்பாரண்யேஸ்வரருக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் 18 நாள் பிரம்மோற்சவ விழா தொடங்குவது வழக்கம். இதன்படி இவ்விழா மே 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கியமான திருவிழா நாட்கள் வருமாறு:
மே 23 - செவ்வாய் - இரவு - அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு.
மே 24 - புதன் - இரவு 9 மணிக்குப் பிறகு - ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபம் எழுந்தருளல்.
மே 25 - வியாழன் - காலை 10 மணிக்குப் பிறகு - ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திலிருந்து யாதாஸ்தானம் எழுந்தருளல்
மே 28 - ஞாயிறு - இரவு - ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா - தங்க ரிஷப வாகன காட்சி.
மே 29 - திங்கள் - இரவு 9.30 மணிக்கு பிறகு - ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமி திருத்தேர் எழுந்தருளல்.
மே 30 - செவ்வாய் - காலை 5.30 மணி - திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம்.
மே 31 - புதன் - - இரவு 7 மணி - ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா
ஜூன் 1 - வியாழன் - இரவு 9 மணிக்குப் பிறகு - தெப்போத்ஸவம்.
மறுநாள் அதிகாலை 4 மணி - ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமி இடையனுக்கு காட்சி கொடுத்தல்.
ஜூன் 2 - வெள்ளி - காலை சுமார் 10 மணி - வைகாசி விசாக தீர்த்தவாரி.