தினமும் ஒரு திருமணம் செய்து கொண்ட நித்ய கல்யாணப் பெருமாள்!


திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோயில்

சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கோவளத்திற்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது திருவிடவெந்தை. மிகச்சிறிய கிராமம்தான். மூலவர் லட்சுமி வராஹப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். உற்சவர்: நித்ய கல்யாணப் பெருமாள். தாயார்: கோமளவல்லி நாச்சியார். தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும், ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும் பெயராயிற்று.

நித்ய கல்யாணப் பெருமாள் உற்சவர்

இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ள முறை மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒரு திருவடி பூமியிலும், மற்றொன்று ஆதிசேடன் மற்றும் அவன் பத்தினி இருவர் முடியிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது தொடையில் தாங்கிக்கொண்டு, சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் வராஹ மூர்த்தியாய் விளங்குகிறார். நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில் மணமாகாத ஆண்களும் பெண்களும் திருமணத்தின் பொருட்டு வேண்டிச் செல்வர். அவர்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறுவதும் கண்கூடு. திருமங்கையாழ்வாரால் மட்டும் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.

திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோவில்

x