புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் இ - உண்டியல் சேவை துவக்கம்


புதுச்சேரி: உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இ-சேவை முறையில் பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்தும் நவீன முறை துவங்கப்பட்டது.

புதுச்சேரியில் புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் வருவது அதிகரித்துள்ளது. பலரும் விநாயகரிடம் வேண்டுதலை வைத்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை செலுத்த இ சேவை உண்டியல் இருக்கிறதா என்று கோயில் தரப்பில் கேட்டனர்.

இதையடுத்து கோயில் தரப்பில் அரசிடம் பேசி இன்று (ஆக.4) முதல் இ-சேவை முறையை துவங்கினர். கோவில் சிறப்பு அதிகாரி பழனியப்பன் காலையில் இதனைத் துவக்கி வைத்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இ-சேவை உண்டியை துவக்கியுள்ளோம். பக்தர்கள் தங்கள் செல்போன் மூலமாக இனி மணக்குள விநாயகர்கோயிலில் காணிக்கை செலுத்தலாம்" என்றார்.

x