காரங்காடு தூய செங்கோல் அன்னை ஆலயத்தில் திருவிழா தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு தூய செங்கோல் அன்னை ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு கிராமத்தில் தூய செங்கோல் அன்னை ஆலயத் திருவிழா கடந்த ஜுலை 24ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நிகழ்ச்சி ஆகஸ்ட் 1ம் தேதி இரவு நடைபெற்றது. திருவிழா திருப்பலியை சிவகங்கை மறை மாவட்டப் பொருளாளர் ஆரோன் நடத்தி வைத்தார். வழிபாட்டினை பங்குத்தந்தை சுவாமிநாதன் நடத்தி வைத்தார்.

பங்குத் தந்தைகள் அருள் ஜீவா, வின்னரசு, அமலதாஸ், பிலிப், செல்வகுமார், பாக்யராஜ், வியாகுலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித செபஸ்தியான், புனித சவேரியார், புனித செங்கோல் மாதா ஆகியோர் வலம் வந்தனர். இந்த நிகழ்வுகளில் தொண்டி, திருவாடானையைச் சுற்றியுள்ள கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

x