முத்தமிழ் முருகன் மாநாடு இலச்சினை வெளியீடு


சென்னை: பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநாட்டு இலச்சினையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையதாவது: ஆகஸ்டில் பழநியில் நடத்தப்படும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இதுவரை 1,003 பேர் ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி உள்ளனர். அதில் 36 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். மாநாடு நடைபெறும் நாளில் பழநியில் உள்ளூர் விடுமுறை அளிக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

x