கோவை: தென்திருப்பதி திருவேங்கிட சுவாமி ஆலயத்தில் தங்கத் தேரோட்டம்


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருவேங்கிட சுவாமி ஶ்ரீவாரி ஆலயத்தில் இன்று மாலை தங்க திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மேட்டுப்பாளையம் தென்திருப்பதி திருவேங்கிட சுவாமி ஶ்ரீவாரி ஆலயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ஆணி மாத புண்ணிய கால நிகழ்ச்சி இன்று (ஜூலை 16) தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் காலை முதல் சிறப்பு ஆராதனைகள், சகஸ்ர நாமார்ச்சனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோயில் பட்டாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து ஶ்ரீதேவி, பூதேவியுடன் திருவேங்கிட சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் ஶ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலையப்ப சுவாமி கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக பவனி வந்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.

x