சிம்ம வாகனத்தில் ஏழுமலையான்!


திருப்பதி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான இன்று (29-ம் தேதி வியாழக்கிழமை) காலை சிம்ம வாகனத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பக்தர்கள் காணும் வகையில் வாகன சேவைகளுடன் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த பிரம்மோற்சவம், வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 3-ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி யோக முத்திரை தரிசனத்துடன் எழுந்தருளினர்.

சிம்ம வாகனத்தில் ஏழுமலையான்

காலை 8 மணி முதல் 10 மணி வரை திருமாட வீதிகளில் வாகன சேவை நடைபெற்றது. இதில் தேவஸ்தான உயர் அதிகாரிகள், ஜீயர்கள், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் தரிசனம்

இன்று இரவு முத்துப் பல்லக்கு வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி பவனி வர இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

x