திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்... பக்தர்கள் உற்சாகம்!


திருநள்ளாறு தேரோட்டம்

புகழ்பெற்ற சனி பகவான் திருத்தலமான திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

சனி பகவானுக்குரிய தலமான இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா, மே 26-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை செண்பக தியாராஜ சுவாமி அலங்கரிக்கப்பட்டிருந்த திருத்தேருக்கு முதலில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளியதும் காலை 5 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இந்த பிரம்மோற்சவ தேரோட்டம் நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, திருநள்ளாறு சட்டப்பேரவை உறுப்பினர் சிவா, துணை ஆட்சியர் ஆதர்ஷ் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

x