2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி


கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துவிட்ட நிலையில் உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால், தமிழகத்தில் தளர்வுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், ஆன்மிக தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ்பெற்றது. ஒவ்வொரு மாதம் பவுர்ணமி அன்று பக்தர்கள் மலைப்பாதையில் கிரிவலம் சென்று இறைவழிபாடு மேற்கொள்வார்கள்.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. கரோனா விதிகளை கடைப்பிடித்து கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

x