ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு


ஆக்கிரமிப்பை அகற்றும் கோயில் அதிகாரிகள்

தனியாரால் திடீரென ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, கோயில் அதிகாரிகள் இன்று மீட்டனர்.

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி கோயிலில், கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு, திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் திருவானைக் கோயில் அருகே 58 சென்ட் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளது . இந்த நிலத்தை, சிலர் நேற்று இரவோடு இரவாக ஆக்கிரமித்து தற்காலிக சுவர்களை அமைத்திருந்தனர்.

இத்தகவல் தெரியவந்ததை அடுத்துஇ உடனடியாக இன்று அந்த நிலத்தை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையிலும் உதவி ஆணையர் கு. கந்தசாமி, மேலாளர் உமா, கோயில் வழக்கறிஞர் சீனிவாசன் மேற்பார்வையில், கோயில் பணியாளர்கள் ஜேசிபி வாகனத்துடன் சென்று அங்கு இருந்த தற்காலிக சுவரை இடித்து அகற்றி, நிலத்தை மீட்டனர் . மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும்.

x