திருப்பாவை ஜீயர்


பகவத் ராமானுஜர்

பகவத் ராமானுஜருக்குத்தான் ‘திருப்பாவை ஜீயர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது.

ஒருசமயம் ராமானுஜர், தன் சீடரான கிடாம்பி அச்சனுடன், சமையலறையில் அமர்ந்து, சமையலுக்குத் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பாக திருப்பாவை பாடியபடி சில இல்லங்களுக்குச் சென்று அவற்றை சேகரிப்பது வழக்கம். அப்படி ஒருநாள் வைணவப் பெரியவரான பெரிய நம்பிகள் இல்லத்துக்குச் சென்று திருப்பாவை பாடினார். அன்று 18-வது திருப்பாவையை (உந்து மதக் களிற்றன்..) பாடினார்.

பாடலின் நிறைவில், ‘செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்’ என்று வரும். அந்த வரிகளைப் பாடிய சமயத்தில் பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் வாயிற்கதவைத் திறந்தார். அத்துழாயைக் கண்டதும் ராமானுஜர் மூர்ச்சையானார். அதிர்ச்சியில் உள்ளே சென்ற அத்துழாய். தனது தந்தையிடம் ராமானுஜர் மூர்ச்சையானது குறித்துக் கூறினார்.

அப்போது பெரிய நம்பிகள், “இந்தப் பாசுரத்தின் நாயகியான நப்பின்னையை, உன் ரூபத்தில் தரிசித்ததால், ராமானுஜருக்கு இதுபோல் ஆகியிருக்க வேண்டும்” என்று கூறியபடி, வாசலுக்குச் சென்று ராமானுஜரை, ‘திருப்பாவை ஜீயரே’ என்று விளித்து வரவேற்றார்.

(கண்ணனின் அருள்பெற நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்பும்படி தோழிகள் கூறுகின்றனர்)

பெரிய நம்பிகளே, ராமானுஜருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்ற பெயரை வழங்கியுள்ளார்.

x