திருமாலின் ஐந்து நிலைகள்


காஞ்சி வரதராஜர்

திருமால் 5 நிலைகளில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது.

பரநிலை – முக்தி அடைந்தவர்களுக்கு வைகுண்டத்தில் தரிசனம் தரும் பரவாசுதேவர்.

வியூஹ நிலை – தேவர்களுக்கு அருள்புரிய பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள்.

விபவ நிலை- அவதாரங்கள் – மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி.

அந்தர்யாமி நிலை- ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இறைவன்.

அர்ச்சா ரூபம் – விக்கிரக வடிவம் – கோயில்களிலும், நம் இல்லங்களிலும் இருக்கும் நிலை.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி

இவற்றில் 5-ம் நிலையாகக் கூறப்படும் அர்ச்சா ரூபமே பெரிதும் சிறப்பாக போற்றப்படுகிறது.

அர்ச்சா ரூபத்தின் சிறப்புகள்

இறைவனை விக்கிரகமாகப் பார்த்தால் மட்டுமே சிலருக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த விக்கிரக வழிபாடு – அர்ச்சை நிலை பிரதிஷ்டையை 4 விதமாகப் பிரிக்கலாம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

ஸ்வயம் வியக்தம் – அதாவது சுயம்பு. சுயமாகவே திருமால் வெளிப்பட்ட தலங்களாக ஸ்ரீரங்கம், திருவேங்கடம் ஸ்ரீமுஷ்ணம், நாங்குநேரி, முக்திநாத், புஷ்கரம் பத்ரிநாத், நைமிசாரண்யம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

தைவிகம் – பிரம்மா, இந்திரன், சூரியன், தேவர்கள் இறைவனை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்வது. தேவ பிரஷ்டை என்றும் அழைக்கப்படும். காஞ்சிபுரம் – பிரம்மதேவர் – அத்திவரதர், குடந்தை – சூரியன் – சக்ரபாணி பெருமாள் ஆகியன தைவிகப் பிரதிஷ்டைத் தலங்கள்.

ஆர்ஷம் - முனிவர்கள், ரிஷிகள் இறைவனை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்வது. மார்க்கண்டேய முனிவர் – உப்பிலியப்பன் கோயில், கோபில கோப்பிரளய ரிஷி – மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆகியன ஆர்ஷ பிரதிஷ்டைத் தலங்கள்.

மானுஷம் – அரசர்கள், மகான்கள், பக்தர்கள் (மனிதர்கள்) இறைவனை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்வது. ராமானுஜர் – கீழத் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள், பஞ்ச பாண்டவர்கள் – திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில் (கேரளா) ஆகியன மானுஷ பிரதிஷ்டைத் தலங்கள்.

காஞ்சி அத்திவரதர்

பொதுவாக இந்த 4 வகைகளில் ஸ்வயம் வியக்த கோயில்கள் சிறப்பு மிக்கதாகக் கொள்ளப்படும். இதற்கு ஒரு ஸ்லோகம் உண்டு.

ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிச்ச ஸ்ரீமுஷ்ணம் தோதபர்வதம், ஸாளக்ராமம் புஷ்கரம் நரநாராயணாச்ரமம் நைமிஷம் சேதி மே ஸ்தானானி அஸௌ முதி ப்ரதானி வையே து அஷ்டக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி வஸாமி அஹம்.

நாராயண மந்திரத்தில் உள்ள 8 எழுத்துகளைக் குறிப்பிடுவதாக கொள்ளப்படுகிறது.

ஓம் நமோ நாராயணாய..

நைமிசாரண்யம் தேவராஜ பெருமாள் கோயில்

x