ஒரு சொற்றொடரை தனித்தனி சொற்களாகப் பிரித்தல். செய்யுள் படிக்கும்போது இப்படி பிரிக்காமல் படித்தால், தமிழ் ஏதோ கடினமான மொழியாகத் தோன்றும்.
காளமேகப் புலவர் எழுதிய வெண்பா, திருமாலின் 10 அவதாரங்களைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. காளமேகப் புலவருக்கும் மற்றொரு புலவருக்கும் வாதப் போர் நடைபெற்றபோது, திருமாலின் அவதாரங்களை ஒரே வெண்பாவில் பாட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் போட்டி. உடனே காளமேகப் புலவர், அரை வெண்பாவிலேயே பாடுகிறேன் என்று கூறி,
மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியில் என்
இச்சையில் உன்சன்மம் இயம்பவா?
மச்சாகூர் மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வா
என்று முடித்தார்.
இங்குதான் பதச்சேதம் முக்கியம்.
மச்சா கூர்மா கோலா சிங்கா வாமா ராமா ராமா ராமா கோபாலா மாவா வா
மச்ச கூர்ம வராக சிங்க வாமன பரசுராம ராம பலராம கிருஷ்ண கல்கி – நிறைவான மாவா – குதிரை மேல் வரும் கல்கி.
Tongue Twister போல இருந்தது. Twistகள் நிறைந்ததே வாழ்க்கை!