சீதை தோளில் கிளி


யதோக்தகாரி பெருமாள் கோயில்

திருவெக்கா யதோக்தகாரி பெருமாள் தலத்தில் சயன கோலத்தில் (வலமிருந்து இடம்), சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோமளவல்லித் தாயாருடன் அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் திருமேனிகள் உள்ளன. இவை சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமேனிகள். இங்கிருக்கும் சீதைக்குத் தனிச்சிறப்பு உண்டு. சீதையின் தோளில் கிளி இருக்கிறது. குறிப்பாக அன்னையின் தலையலங்காரம் சுருள்முடி, ஃப்ரில் வைத்த ஜடை, ராக்கொடி, கிளி என்று நுணுக்கமாகச் சிலையைச் செய்துள்ளனர்.

ஆண்டாளும் வழக்கமான கொண்டையும் கிளியும் இல்லாமல் அருள்பாலிக்கிறாள்.

சரஸ்வதி தேவி, தன் நாயகனான பெருமாளை சிரமப்படுத்தியதால், ஆண்டாள் இவ்விரண்டையும் துறந்தாள் என்று விளக்கம் தரப்படுகிறது.

x