நாமம் நல்ல நாமம்!


இப்போது பலரும், ரயில் பயணங்களில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அப்படி என்ன எழுதுகிறார்கள் என்று பார்த்தால், ‘ராம ராம’ அல்லது ‘ஸ்ரீ ராம ஜயம்’ என்பதை எழுதிக் கொண்டிருப்பார்கள்.

ஸ்ரீக்ருஷ்ண வருஷ்ணிவரயாதவ ராதிகேஸ

கோவர்தனோத்தரண கம்ஸவினாய சௌரே

கோபால வேணுகர பாண்டுசு தைகபந்தோ

ஜிக்வேம் ஜபேதி ஸததம் மதுராஷராணி

இது ஹரிநாமாஷ்டகத்தில் நிறைவு ஸ்லோகம்.

"இனிய வார்த்தைகளைக் கூற என் நாக்குக்கு அருள்புரிவாய் கிருஷ்ணா. கோவர்த்தன மலையைத் தூக்கி அனைவரையும் காத்தவனே, கொடிய எண்ணம் கொண்ட கம்சனை அழித்தவனே, பாண்டவர்களின் தோழனே, அனைவரையும் காத்தருள்வாய்" என்ற பொருள் தரும் இந்தப் பாடலை முடிந்த நேரத்தில் நிறைய எண்ணிக்கையில் கூறலாம்.

முழுவதுமாகப் பாட முடியாதபட்சத்தில்,

ராமா ராமா… கிருஷ்ணா… கிருஷ்ணா… சிவ… சிவ… என்று இறை நாமாக்களைக் கூறலாம். ஹரே ராம ஹரே ராம… ராம ராம ஹரே ஹரே… ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண... க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே… என்றும் சொல்லலாம்.

இப்படி சில அருமருந்துகள் நம் கவலையை மறக்கச் செய்யும் என்பது நிதர்சனம்.

x